டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.;
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் பள்ளம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 45) மற்றும் மாணிக்கம் (வயது 44) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.