இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.;

Update: 2022-03-09 04:45 GMT

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மதன்குமார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மதன்குமார். இவர் குஜராத்தில் உள்ள பைப் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மதன்குமார் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயி ஒருவரை சந்தித்து பைப் ஆர்டர் பெறுவதற்கு சென்றுள்ளார். அப்போது, பங்காளப்புதூர் ஜே.கே.கே.முனிராஜா பொறியியல் கல்லூரி பிரிவு அருகே சென்ற போது, எதிரே காளியூரை சேர்ந்தவரது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயமடைந்த மதன்குமார் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மதன்குமாருக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், ரஞ்சினி என்ற மனைவியும், 2 மாத குழந்தையும் உள்ளனர்.

Tags:    

Similar News