பவானி அருகே இடி தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டையில் இடி தாக்கியதில் 2 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.;

Update: 2025-04-12 03:20 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டையில் இடி தாக்கியதில் 2 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலையில் 4.30 மணி அளவில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவர் வீட்டு முன்பு கட்டப்பட்டிருந்த 2 மாடுகளை இடி தாக்கியது.

இதில், 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்த முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில், பூனாச்சி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

இடி தாக்கி 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News