ஈரோடு: மஞ்சள் விற்பனைக்கூடங்களுக்கு 5 நாட்கள் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விற்பனைக்கூடங்களுக்கு 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது;

Update: 2021-10-28 01:15 GMT

ஈரோடு மாவட்டத்தில்,  ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை நிலையம் என 4 இடங்களில்,  திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை,  மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வருகிற 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை, 5 நாட்களுக்கு மஞ்சள் விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் மாதம் 8-ந்தேதி மஞ்சள் வர்த்தகம் வழக்கம்போல் செயல்படும் என, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News