கொடுமுடி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம் புதூரில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.24) நடைபெற்றது.
கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம் புதூரில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.24) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி வட்டாரம் சென்னசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கொளத்துப்பாளையம் புதூர் மற்றும் வருந்தியாபாளையம் பகுதிகளில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனையின் படி நடைபெற்ற இந்த முகாம்களில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 110 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முகாம்களில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.