கொடுமுடி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆவுடையார் பாறையில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

Update: 2024-12-24 12:00 GMT

கொடுமுடி பகுதியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆவுடையார் பாறையில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி வட்டாரம் கொடுமுடி அருகேயுள்ள ஆவுடையார்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (டிச.24) நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது. முன்னதாக, இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மரு.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

இம்முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன்சர்மா, காச நோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பால குமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 120 பேர்கள் கலந்து கொண்டனர். ஆவுடையார் பாறை ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.


மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News