சித்தோட்டில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (ஜன.20) நடைபெற்றது.;
சித்தோட்டில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று (ஜன.20) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு உருவாக்கத்தில் பொதுமக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.கைலாசம், காசநோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 65 பேர்கள் கலந்து கொண்டனர். மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு நெஞ்சக நுண் கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.