நம்பியூர் அருகே காசநோய் ஒழிப்பு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகேயுள்ள எ.செட்டிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (நவ.8) நடைபெற்றது.

Update: 2024-11-09 05:00 GMT

நம்பியூர் எ.செட்டிபாளையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகேயுள்ள எ.செட்டிபாளையத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று (நவ.8) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாரம் எலத்தூர் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, மழைக்கால நோய்கள் மற்றும் அதன் பாதிப்புகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு முறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம் பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காச நோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.சண்முகம், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஆர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ராம்குமார், விஷ்ணு விக்னேஷ், செவிலியர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர் மற்றும் பொதுமக்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக நுண்கதிர் பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News