சிவகிரியில் காசநோய் ஒழிப்பு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (நவ.29) நடைபெற்றது.

Update: 2024-11-29 12:30 GMT

சிவகிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

சிவகிரியில் காசநோய் ஒழிப்பு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (நவ.29) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சிவகிரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம்,நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே உறுதியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், எலிக்காய்ச்சல் அதன் தடுப்பு வழிமுறைகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், சுற்று புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.வெங்கடேஷ் பிரபு, மருத்துவ அலுவலர் மரு.கண்மணி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தோமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதீஷ், ஜெய்சிங், ஆய்வக நுட்புநர்கள் தனலட்சுமி, மதிவாணன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக மார்பக ஊடுகதிர் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News