திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர், கிளீனர் உயிர்தப்பிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை கீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.;

Update: 2022-02-05 13:00 GMT

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரி.

தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், கர்நாடக  மாநிலத்தில் இருந்து கல்பாரம் ஏற்றிய லாரி சேலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது லாரி 20வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதையறிந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் கீழே குதித்து உயிர்தப்பினார். 

Tags:    

Similar News