கோபிச்செட்டிப்பாளையம் அருகே லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்து
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கோவை பிரிவு என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஐதராபாத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு மில்லுக்கு பஞ்சு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை குமாரபாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் ஒட்டி வந்தார்.
லாரி இன்று அதிகாலை கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கோவை பிரிவு என்ற இடத்தில் வந்த போது நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்தானது. இதில் டிரைவர் தப்பினார். இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.