பாம்புக்கு வழிவிட்டதால் நேர்ந்த சோகம்: மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து

அந்தியூர் அருகே ரோட்டின் குறுக்கே சென்ற பாம்புக்கு வழிவிட முயன்றபோது, ஈச்சர் வாகனம் நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2022-01-21 09:45 GMT

கவிழ்ந்து விபத்துக்குள்ளான மினி லாரி.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் கொளத்தூருக்கு, வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு அந்தியூர் வழியாக இன்று அதிகாலை ஈச்சர் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

வாகனத்தை சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், அந்தியூர் பெரிய ஏரி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் முன்பு பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்ட ஓட்டுனர் வரதராஜன் திடீரென பிரேக்கை அழுத்தினார்.

இதில் நிலை தடுமாறிய வாகனம் சாலையின் இடது பக்கத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து ஓட்டுனர் வரதராஜன் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

இந்த விபத்தில் ஓட்டுநர் வரதராஜன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News