பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம்: ஈரோடு மாநகரில் இன்று (ஏப்.,5) போக்குவரத்து மாற்றம்!
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி, ஈரோடு மாநகரில் இன்று (ஏப்.,5) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலத்தையொட்டி, ஈரோடு மாநகரில் இன்று (ஏப்.,5) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களில் இன்று (ஏப்.,5) கம்பம் ஊர்வலத்துடன் மஞ்சள் நீராட்டமும் நடக்கிறது. இதனால், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகரில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,சேலம், திருச்செங்கோடு, நாமக்கலில் இருந்து பள்ளிப்பாளையம் வழியாக வரும் பேருந்துகள் காவிரி ரோடு, கே.என்.கே. ரோடு வழியாக வ.உ.சி. பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு செல்லவேண்டும்.
இதேபோல், கோபி, சத்தி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பாரதி தியேட்டர் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு கோபி, சத்தி ரோட்டிலேயே செல்லவேண்டும். பவானி, அந்தியூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள், அசோசியேசன் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி செல்ல வேண்டும்.
கோவை, திருப்பூரில் இருந்து பெருந்துறை வழியாக வரும் வாகனங்கள் பெருந்துறை ரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா வலது புறம் திரும்பி பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பெருந்துறை சாலையிலேயே செல்லவேண்டும்.
கோவையில் இருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள், பெருந்துறை ரோடு, திண்டல் கபே (ரிங்ரோடு), ரங்கம்பாளையம், ஆனைக்கல்பாளையம், பரிசல் துறை நால்ரோடு வழியாக பள்ளிபாளையம் செல்லவேண்டும்.
இந்த தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.