திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இது தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கரூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது நடுரோட்டில் பழுதாகி லாரி நின்றது. தகவலறிந்து, வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.