கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலை

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை

Update: 2023-09-25 19:45 GMT

கருமாண்டி செல்லிபாளைய பேரூராட்சி துணைத்தலைவர் சக்தி குமார்.

பெருந்துறை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி துணைத்தலைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அருகே உள்ள கருமாண்டிசெல்லிபாளையம் எலந்தக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்தி குமார் (வயது 39). இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு சஞ்சய் (14) என்ற மகன் உள்ளார்.

திமுகவைச் சேர்ந்த இவர் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சித் துணைத் தலைவராக இருந்து வந்தார் அடிக்கடி வயிற்று வலியால் சக்தி குமார் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

பின்னர், குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவர் இச்சம்பவம் குறித்து பெருந்துறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Tags:    

Similar News