கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Kodiveri Dam- பவானி ஆற்றில் 2000 கன அடி நீர் வெளியேறி வருவதால், கொடிவேரி அணையில் இன்று ஒருநாள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-01 09:30 GMT

கொடிவேரி அணை பைல் படம்.

Kodiveri Dam- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்டும் தண்ணீரானது கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில்,  தற்போது காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு கொடிவேரி அணை பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனையடுத்து, கொடிவேரி அணையில் 2000 கன அடி தண்ணீர் வெளியேற தொடங்கியது. அணையின் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு இன்று ஒரு நாள் பொதுப்பணித்துறையினர் தடை விதித்தனர் .மேலும், ஆடி 18 தினத்தில் பவானி ஆற்றில் நீர்வரத்தை பொறுத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News