சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.2,100-க்கு ஏலம்.

Update: 2021-11-29 00:30 GMT

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,295-க்கும், முல்லை ரூ.700 க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.71-க்கும், பட் டுப்பூ ரூ.68-க்கும், ஜாதிமல்லி ரூ.625-க்கும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்து 100-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.350-க்கும். துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Tags:    

Similar News