ஈரோடு மாநகராட்சியில் வரி செலுத்த இன்று கடைசி நாள்!
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த இன்று (மார்ச் 31) கடைசி நாளாகும்.;
ஈரோடு மாநகராட்சி அலுவலகம் (பைல் படம்).
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த இன்று (மார்ச் 31) கடைசி நாளாகும்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் நேற்று வரை 88 சதவீதம் வரி வசூலாகி இருக்கிறது. இன்று (மார்ச் 31) வரி செலுத்த கடைசி நாள் என்பதால், வரி செலுத்தாதவர்கள் இன்று (31ம் தேதி) இரவு 10.30 மணிக்குள் வரி செலுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, வரி செலுத்தாதவர்கள் தங்களின் வரியை செலுத்தி, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரி தொகை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்றம் மூலம் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.