பவானிசாகர் அணையின் இன்றைய (15ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,372 கன அடியாக அதிகரிப்பு.

Update: 2022-04-15 03:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அணைக்கு நேற்று 705 கன அடியாக இருந்த நீர்வரத்து‌ 2,372 கன அடியாக இன்று காலை அதிகரித்தது.

அதேசமயம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 83.19 அடியாக, நீர் இருப்பு 17.43 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக, 200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் என மொத்தம் 705 கன அடி வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News