கொடிவேரி அணை அருகே வாலிபர் தண்ணீரில் முழ்கி சாவு

Tirupur To Kodiveri-திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி பலியானார்.;

Update: 2021-12-06 06:00 GMT

பைல் படம்.

Tirupur To Kodiveri-திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் ரகு (வயது 21) . திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் கொடிவேரி தடுப்பணை உயர்மட்ட பாலத்தின் அருகே, பவானி ஆற்றில் நேற்று மாலை குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியதில் ரகு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News