அந்தியூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.;

Update: 2022-03-15 16:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 47). நேற்று மாலை அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனது மகன் தஸ்வந்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மூலக்கடை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த பர்கூர் பெரியூரை சேர்ந்த சக்திவேல், மோகன்குமார் வந்த வாகனத்தின் மீது மோதினார்.

இதில், மோகன்குமார், அவரது மகன் தஸ்வந்த் மற்றும் சக்திவேல் ஆகிய மூவரும் காயமடைந்தனர். அதன் பின் மூன்று பேரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து, மோகன்குமார் அளித்த புகாரில் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News