கோபி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை அகதி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-24 14:30 GMT

கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளிமலைகரடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு போலீசாரை கண்டு தப்பி ஓடிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்த கதிர்மாணிக்கம் மகன் நந்து (எ) அஜான்தாகுமார் சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என்.பாளையத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, அவரிடம் கஞ்சா வாங்க வந்த அரசூர் தட்டாம்பாளையத்தை சேர்ந்த காமாட்சி மகன் குருபிரசாத், சுண்டக்காம்பாளையம் சின்னபீளமேட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News