பவானிசாகர் அருகே 2 அரசு பேருந்துகள் மோதியதில் பெண் பயணிகள் 3 பேர் காயம்!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே 2 அரசு பேருந்துகள் மோதியதில் பெண் பயணிகள் 3 பேர் காயமடைந்தனர்.;

Update: 2025-04-24 03:30 GMT

பவானிசாகர் அருகே 2 அரசு பேருந்துகள் மோதியதில் பெண் பயணிகள் 3 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ராஜீவ்மொக்கை என்ற இடத்தில் உள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.

அப்போது, அங்கு வந்த பண்ணாரியில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் தடம் எண் பி1 அரசு நகர பேருந்து, கொத்தமங்கலம் ராஜீவ்மொக்கை பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்த பழனி அரசு பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இதில் நகர பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.

மேலும், பேருந்தின் முன்பக்கம் அமர்ந்து இருந்த 3 பெண் பயணிகள் லேசான காயம் அடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொத்தமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News