கோபி அருகே சரக்கு வேனில் கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோபிசெட்டிபாளையம் அருகே கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்திய மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-04-28 13:00 GMT

கைது செய்யப்பட்ட பிரசாத் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேனை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

சோதனையில், மூன்றரை டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் விசாரணையில், நம்பியூர் எலத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 24). டிரைவரான இவர் போதிய வருமானம் இல்லாததால், சரக்கு வேனை ஒட்டிக்கொண்டு வந்தாக கூறியுள்ளார். இதனையடுத்து, பிரசாத்தை கைது செய்த போலீசார், மூன்றரை டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News