அந்தியூர் பிரம்மதேசம் பெத்தாரணசுவாமி கோவிலில் தேர்திருவிழா

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பெத்தாரணசுவாமி கோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2022-03-17 10:00 GMT

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பெத்தாரணசுவாமி கோவிலில் தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள,பிரம்மதேசம் பெத்தாரணசுவாமி கோவிலில், நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த 1ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கொடியேற்றுதல் நிகழ்ச்சி, தினமும் பல்வேறு அலங்காரம் சுவாமிக்கு செய்யப்பட்டது. பிரம்மதேசம் புதூர் மடப்பள்ளியில் இருந்து, சுவாமி சிலைகள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டன. நேற்று அக்கினிகப்பரை ஊர்வலம் நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கையில் தீ சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, 50 அடி மகாமேரு தேரில், பெத்தாரணசுவாமி, சிறிய தேரில் பெருமாள், பல்லக்கில் காமாட்சியம்மன் எழுந்தருளினர். பிரம்மதேசம் பகுதியில் முக்கிய வீதிகளின் வழியே சென்று விட்டு, மீண்டும் கோவில் மடப்பள்ளிக்கு சுவாமிகளை கொண்டு சென்றனர். விழாவில் பிரம்மதேசம், அந்தியூர், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம் புதூர் பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News