கோபி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 2 இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 2 இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் அருகேயுள்ள அரக்கன்கோட்டை ஊராட்சி மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூக்கி கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு ஏதோ சத்தம் கேட்டு வெளியில் சென்று நாகராஜ் பார்த்துள்ளார்.
அப்போது, வீட்டின் முன்பு சிமெண்ட் செட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பங்களாப்புதூர் போலீசார் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் எப்படி? தீப்பற்றியது, மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? அல்லது வானங்களில் பழுது ஏற்பட்டு அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில், கார் பாதியளவும், இருசக்கர வாகனங்கள் முழுவதும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.