அந்தியூரில் விவசாய தோட்டங்களில் இருந்து மின்மோட்டார் திருட்டு

அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கிணறுகள், போர்வெல்களிலிருந்து மின் மோட்டார்கள் அடிக்கடி காணாமல் போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2021-11-30 17:00 GMT

கைது செய்யப்பட்ட கதிரவன், பெரியசாமி. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களிலிருந்து மின் மோட்டார்கள் அடிக்கடி காணாமல் போவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகையன் தலைமையில் அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் பருவாச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பருவாச்சி பஸ் நிறுத்தம் அருகில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் பருவாச்சி தாளபாளையம் பகுதியைச் சேர்ந்த கதிரவன் (வயது 31) பெரியசாமி (வயது 27) ஆகிய இருவர் என தெரியவந்தது. அவர்களை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் போர்வெல்களிலிருந்து மோட்டார்களை திருடியது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்கள் திருடி விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News