தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ஈரோடு வருகை

தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி தமிழக கவர்னர் நாளை அரச்சலூர் ஓடாநிலைக்கு வருகை தருவதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.;

Update: 2022-08-02 13:00 GMT

தீரன் சின்னமலை.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓடாநிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவிடம் உள்ளது. இந்த நிலையில், தீரன் சின்னமலையின் 217-வது நினைவு நாளான நாளை (புதன்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதில், தமிழக கவர்னர் ரவி கலந்து கொள்கிறார். இதனால், அப்பகுதியில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

Similar News