அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து ஜன.6ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வரும் ஜன.6ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வரும் ஜன.6ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024-2025ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் வரட்டுப்பள்ளம் அணை பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்காக வரும் ஜன.6ம் தேதி (நாளை மறுதினம்) முதல் வருகிற ஜன.17ம் தேதி முடிய வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பகுதி ஏரிகளான அந்தியூர் ஏரி, பிரம்மதேசம் ஏரி,வேம்பத்தி ஏரி மற்றும் ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கு மொத்தம் 23.586 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டு உள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் மற்றும் பவானி வட்டாரங்களில் உள்ள 809 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.