ஈரோடு: சித்தோடு மஞ்சள் ஏலம் வெள்ளிக்கிழமைக்கு மாற்றம்!
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் நடைபெற்று வந்த மஞ்சள் ஏலம் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.;
சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் நடைபெற்று வந்த மஞ்சள் ஏலம் வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பா.லட்சுமணன் தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடந்த 2 வாரங்கள் நடந்தது. இங்கு தேசிய வேளாண் சந்தை திட்டம் (இநாம்) மூலம் மஞ்சள் ஏலம் வருகிற வாரங்களில், வியாழக்கிழமைக்கு பதில், வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும். எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை கல், மண், தூசி நீக்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.