அந்தியூர் அருகே பருவாச்சியில் இடி தாக்கி கோவில் கலசம் சேதம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பருவாச்சியில் இடி தாக்கியதில் கோவில் கோபுர கலசம் சேதமடைந்தது.;
அந்தியூர் அருகே பருவாச்சியில் இடி தாக்கியதில் கோவில் கோபுர கலசம் சேதமடைந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், பருவாச்சி அருகே பாலம்பாளையத்தில் உள்ள ஐயனாரப்பன் கோவில் கோபுரத்தின் மீது இடி தாக்கியதில், கோபுர கலசம் கீழே விழுந்து சேதமடைந்தது. இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால், கோவிலில் யாரும் இல்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.