ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல்!
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டய பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு சத்தி ரோடு கொங்கம்பாளையம் பிரிவு வாய்க்கால்மேடு பகுதியில் யுவராஜ் பள்ளிக்கூட வளாகத் தில் ஈரோடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2025-2026-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங் கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை www.tncu.tn.gov.com என்ற இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மாணவர்கள் சேர்க்கைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக பிளஸ்-2 தேர்ச்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியு டன் 3 ஆண்டு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1-7-2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஓராண்டு அதாவது 2 பருவ முறைகளுடைய பட்டய படிப்பு ஆகும். ரூ.20 ஆயிரத்து 850 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம்.
இந்த தகவலை ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா தெரிவித்து உள்ளார்.