ஈரோட்டில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி: 1ம் தேதி தொடக்கம்!
ஈரோட்டில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1ம் தேதி தொடங்குகிறது.;
ஈரோட்டில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி கூறியதாவது:-
கொரோனா நோய் பரவலின் போது தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் விளைவு தெருநாய்களின் தொல்லை காணப்படுவதாக அனைத்து பகுதிகளிலும் இருந்தும் புகார் வந்த வண்ணம் உள்ளது.
கருத்தடை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (மே) 1ம் தேதி முதல் ஈரோட்டில் தெருநாய்களுக்கும், வளர்ப்பு நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.
பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் தெரு நாய்கள் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அவைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.