ஈரோட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஈரோட்டில் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.;
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை (பைல் படம்).
ஈரோட்டில் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு நாதக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் சர்பணா (வயது 19). இவர் பெருந்துறை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அவதி அடைந்து வந்தார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக ஈரோடு எல்லை நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்கு சபர்ணா குடும்பத்துடன் வந்துள்ளார். நேற்று மீண்டும் சபர்ணாவுக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, வெளியே சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்து மருத்துவர் வரும் வழியிலேயே சபர்ணா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.