பவானிசாகர் அருகே வனத்துறை - விவசாயி இடையே தகராறு: இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனத்துறை - விவசாயி இடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
பவானிசாகர் அருகே வனத்துறை - விவசாயி இடையே ஏற்பட்ட தகராறில் இருதரப்பு மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவர், கடந்த 13ம் தேதி இவர் வனப்பகுதியில் உள்ள மாசி கருவண்ணராயர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பவானிசாகர் காராச்சிகொரை வன சோதனைச்சாவடி அருகே வந்தார். அப்போது, அங்கிருந்த வனச்சரகர் சதாம் உசேன், வனத்துறை ஊழியர்கள் தன்னை தாக்கியதாகவும், அதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பவானிசாகர் போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதேபோல், வனக்காப்பாளர் குப்புசாமி, மாணிக்கம் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து, தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வனச்சரகர் சதாம் உசேன், வனத்துறை ஊழியர்கள் 6 பேர் மீதும் மற்றும் விவசாயி மாணிக்கத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.