ஈரோடு: சிவகிரி அருகே நாயின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் பீதி; போலீசார் விளக்கம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நாயின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் பொதுமக்கள் பீதியடைந்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.;

Update: 2025-05-18 04:00 GMT

சிவகிரி அருகே நாயின் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் பொதுமக்கள் பீதியடைந்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் வேல்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வசித்து வரும் மணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பினார்.

பின்னர், நேற்று காலையில் அவர் வளர்த்து வந்த இரு நாய்களில் ஒரு நாய்க்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்தவர் சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்ததில், வேலியில் சிக்கியதில் நாயின் கழுத்தில் ரத்த காயம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. சிவகிரி அருகே தம்பதி கொலையால் பீதி அடைந்துள்ள மக்களுக்கு, நாயின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அதை கொல்ல முயற்சி என பரவிய தகவல் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் நாயை யாரும் அடித்து காயப்படுத்தவில்லை என்பது உறுதியானதாக மாவட்ட காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .

Similar News