பெருந்துறையில் வரும் மார்ச் 22ம் தேதி வரை முறையாக குடிநீர் விநியோகம் இருக்காது: பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் வரும் மார்ச் 22ம் தேதி வரை முறையாக காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update: 2025-03-10 03:00 GMT

பெருந்துறை பகுதியில் வரும் மார்ச் 22ம் தேதி வரை முறையாக காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதிக்கு காவிரி ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டை அடுத்த சமயசங்கிலியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள கட்டளை கதவணை பகுதியில் பராமரிப்பு பணி தொடங்கியது.

இந்த பணி வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால்,பெருந்துறை பகுதிக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்ட காவிரி ஆற்று குடிநீர் வரும் மார்ச் 22ம் தேதி சரிவர இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துமாறு பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

Similar News