ஆப்பக்கூடல்: கீழ்வாணியில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணியில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.;
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணியில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கீழ்வாணி மூங்கில்பட்டியில் உள்ள சஞ்சீவிராயப் பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சர்வ வைகுண்ட முக்கோடி ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (ஜன.10) நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இதனையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சஞ்சீவிராயப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக அதிகாலை 5.30 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பிரகாசம் செய்திருந்தார்.