அந்தியூர் ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தார் சாலை பணி துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-08-16 12:45 GMT

மைக்கேல்பாளையம் ஊராட்சியில் ரூ.39.58 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ இன்று (16ம் தேதி) துவக்கி வைத்தார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரிடம் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கூத்தம்பூண்டி ஊராட்சியில், கூத்தம்பூண்டி விநாயகர் கோயில் முதல் வேலப்பகவுண்டர் தோட்டம் வரை ரூ.33.27 லட்சத்தில் தார் சாலை, பிரம்மதேசம் ஊராட்சியில் கல்லாம்பாறை முதல் சின்குளம் வரை ரூ.35.62 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது.


இதேபோன்று, மைக்கேல்பாளையம் ஊராட்சியில் பாலக்குட்டை முதல் மொடப்பாளி வரை ரூ.39.58 லட்சத்தில் தார் சாலை, எண்ணமங்கலம் ஊராட்சியில் ஆலயங்கரடு முதல் மாத்தூர் எல்லை வரை ரூ.35 62 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணிக்களுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு மொத்தம் ரூ.1.44 கோடி மதிப்பில் துவங்கப்பட உள்ள பணிகளை பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), சரவணன் (மைக்கேல் பாளையம்), மயில்கந்தசாமி (எண்ணமங்கலம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News