ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்!

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார்.;

Update: 2025-05-22 12:00 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், 56வது வார்டுக்குட்பட்ட பாண்டியன் நகர் (திருப்பதி கார்டன்), பாண்டியன் நகர் மெயின் ரோடு, பாண்டியன் நகர் குறுக்கு சாலை, இரணியன் வீதி (லட்சுமி கார்டன்) சேரன் நகர் (லட்சுமி கார்டன்) 4வது வீதி, சூர்யா கார்டன் மெயின் ரோடு, சந்தோஷம் நகர், ராம் நகர், இரணியன் வீதி -1 (வள்ளி முருகன் நகர்), இரணியன் வீதி ராஜகணபதி நகர், இரணியன் வீதி-1 (கந்தன் நகர்) மற்றும் சடையம்பாளையம் சாலை (கொங்கு பள்ளி எதிரே சாலை), பூங்கா நகர், திருப்பதி கார்டன் 5-வது வீதி, ரெயின்போ கார்டன். ஸ்ரீ திருப்பதி கார்டன். சிவம்நகர், கொங்கு நகர், 58வது வார்டுக்குட்பட்ட ஜீவானந்தம் வீதி குறுக்கு சாலை 1 (முதலியார் தோட்டம்), காந்திஜி வீதி - 3 (ராஜீவ் நகர்). சக்தி நர்ஷிங் ஹோம் பின்புறம், 59வது வார்டுக்குட்பட்ட வண்டிக்காரன் தோட்டம் ஆகிய பகுதிகளில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதியதார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, 5வது வார்டு ஆயப்பாளியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், 9வது வார்டு எஸ்.எஸ்.பி. நகரில் கல்வி நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியினையும். அடுக்குப்பாறை பகுதியில் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியினையும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து, விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, 5வது வார்டு மொக்யைம்பாளையத்தில் பொது நிதியின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News