பவானியில் 'புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி' என்ற கட்சி அறிமுகம்
New Party -பவானி லட்சுமிநகரில் "புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி" எனும் புதிய கட்சி அறிமுக விழா, நேற்று நடைபெற்றது.;
New Party -'புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி' என்னும் கட்சியின் அரசியல் துவக்க விழா, ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சுரேஷ், கட்சியின் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்று கட்சியின் கொள்ளைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்திக்காக முயற்சிகளை முன்னெடுக்க தொடங்கியதால், அந்த மாற்றத்திற்கு ஏற்றார் போல், எங்களது கட்சி செயல்படும். தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் இருப்பதால், அதனை நிரப்புவதற்காக முயற்சியை, புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி முன்னெடுக்கும். அதற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. மேலும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியும், போராட்டங்களில் பங்கேற்றும் நீதியை கட்சி பெற்றுத் தரும் கட்சியாக புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி இருக்கும், என்றார்.
இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் கொடியை அறிமுகம் செய்து, புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். இதில், அகில இந்திய செய்தி தொடர்பாளராக அருள் பிரசாத் , அகில இந்திய ஒருங்கிணைப்பாளராக கார்த்திகேயன், மாநில பொது செயலாளராக சிவக்குமார், மாநில செயலாளராக அண்ணாமலை ஆகியோர் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2