ஈரோடு மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: தொழிலாளர் நலத்துறையினர் எச்சரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். இதில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தெளிவாக தெரியும்படி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
அதன்பிறகு, அவரவர் விரும்பும் மொழிகளில் பெயர் பலகை அமைக்கலாம். எனவே கடைகள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு, வணிக சங்கங்களை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியிருந்தது.
மேலும், தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்று விட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சோதனையில் ஈடுபட உள்ளனர்.
அப்போது தமிழில் பெயர் பலகை இல்லையென்றால், சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.