கோபி அருகே நீரில் முழ்கியவரை தேடும் பணி தீவிரம்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முழ்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
நாகேந்திரன்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் முழ்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் கொங்குநகர் மெயின்ரோடு, திருநீலகண்டபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன். சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நாகேந்திரன் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் ராமநாயக்கனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். வரும் வழியில், வெள்ளாங்கோயில் என்ற இடத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிந்த போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த சிறுவலூர் போலீசார் நாகேந்திரனை தேடி வருகின்றனர்.