அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
அந்தியூர் வட்டாரத்தில் நாளை 169 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சின்னத்தம்பிபாளையம் அத்தாணி எண்ணமங்கலம் பர்கூர் மற்றும் ஓசூர் ஆகிய ஐந்து ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 169 தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த முகாமில் 3 தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.