சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட முயன்றவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இறந்து கிடந்த மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்றவரை வனத்துறையினர் கைது, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.;

Update: 2025-01-08 13:45 GMT

கைது செய்யப்பட்ட பெருமாள், பறிமுதல் செய்யப்பட்ட புள்ளி மான் இறைச்சியை படத்தில் காணலாம்.

சத்தியமங்கலம் அருகே இறந்து கிடந்த மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்றவரை வனத்துறையினர் கைது, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் வனச்சரகர் தர்மராஜ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று (ஜன.7) ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு கருமலை தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (வயது 35) என்பவர் இறந்து கிடந்த புள்ளி மானின் இறைச்சியை சமைத்து சாப்பிட துண்டு துண்டாக வெட்டிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, புள்ளி மானை இறைச்சியை பறிமுதல் செய்து, பெருமாளை கைது செய்த வனத்துறையினர் சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஸ் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்தி, பெருமாளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News