மாணவியை கடத்தி பாலியல் பாலத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

16 வயது மாணவியை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2025-03-21 01:40 GMT

ஹரிஸ்.

16 வயது மாணவியை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் என்கிற ரமேஷ் அரவிந்த் (வயது 21). இவர், திருவிழாக்களுக்கு சென்று மேளம் அடித்து வந்தார்.

கடந்த 2021ம் ஆண்டு பவானிசாகர் அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவில் மேளம் அடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த பிளஸ்-1 ஹரிஷ் படிக்கும் 16 வயது மாணவியுடன் ஹரிசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து,  ஹரிஷ் திருமண ஆசை வார்த்தை கூறி. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி மாணவியை பவானிசாகரில் இருந்து ஈரோட்டுக்கு வரவழைத்தார்.

பின்னர், இங்கிருந்து உப்பாரப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு மாணவியை கடத்தி சென்றார். பின்னர், மறுநாள் அங்கிருந்து பெரியகாடம்பட்டி பகுதிக்கு மாணவியை அழைத்து சென்று அங்கு 3 நாட்கள் தங்க வைத்து ஹரிஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், பவானிசாகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குபதிவு செய்து ஹரிசை கைது செய்தனர்.

இதுதொடர்பான, வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி சொர்ணகுமார், ஹரிசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

Similar News