திருச்சியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
திருச்சி பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.;
திருச்சி பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் நேற்று (மார்ச் 23) மாலை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சன் தொலைக்காட்சி செய்தியாளர் இஸ்லாம், தினகரன் நாளிதழின் புகைப்படக் கலைஞர் சுந்தர் ஆகியோர்களை பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கி செல்போனை பறிக்க முயற்சித்துள்ளனர்.
இதில், சுந்தர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இஸ்லாம் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். ஓஒழுக்கக்கேடான, காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ள இச்சம்பவத்தை ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராக நடத்து கொள்ளும் போக்கை வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.