ஈரோடு எம்.பி. பிரகாஷ் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்
ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் எம்பி கே.இ.பிரகாஷ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்றது.;
ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் எம்பி கே.இ.பிரகாஷ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, குழு தலைவரும், ஈரோடு எம்.பி.யுமான கே.இ.பிரகாஷ் தலைமை தாங்கினார். இக்குழுவின் நோக்கம், அரசின் திட்டங்கள், நிதிகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்தல், வளர்ச்சி திட்ட பணிகளை விரைவுபடுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுத்து கொள்ளப்பட்ட திட்டங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் வட்டார வாரியாக பதிவு செய்தோர். பணி வழங்கப்பட்ட நாட்கள், மாநகராட்சியில் நடந்து வரும் பணிகள், அம்ரூத் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு நடந்தது. மாவட்டத்தில் அரசு திட்டங்கள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும், மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடித்து பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, திருப்பூர் எம்.பி. சுப்பராயன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), மாநகராட்சி மேயர் நாகரத்தினம், காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, வணிகவரி ஈரோடு கோட்ட இணை ஆணையர் (மாவ) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், துணை இயக்குநர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) குலால் யோகேஷ் விலாஸ், ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா (பொது), செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) சேகர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.