ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.30ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மேட்டுக்கடை துணை மின் நிலைய காரைவாய்க்கால் மின் பாதை மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 30ம் தேதி) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டுக்கடை துணை மின் நிலைய காரைவாய்க்கால் மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- சிந்தன்குட்டை, நாலுவல்லக்காடு, காரைவாய்க்கால், கந்தாம்பாளையம், வாவிகடை நீரேற்று நிலையம், பெருந்துறை நீரேற்று நிலையம், ஊணாச்சிபுதூர் மற்றும் சின்னியம்பாளையம்.
சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஜர்த்தல், கண்ணாமூச்சி, சித்தாகவுண்டனூர் மற்றும் பாப்பாத்திக்காட்டு புதூர்.