ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.16) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.16) வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.16) வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ரங்கம்பாளையம் மின் பாதை, அறச்சலூர் துணை மின் நிலையம் மற்றும் ஈங்கூர் துணை மின் நிலையத்தில் நாளை (மே.16) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலைய ரங்கம்பாளையம் மின் பாதை (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- ஈரோடு சுப்பிரமணியம்நகர், கே.கே.நகர், ஸ்ரீகார்டன் மற்றும் கல்யாணசுந்தரம் வீதி.
அறச்சலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- மேட்டூர் சத்தியபுரி, கத்தகொடிகாடு, கன்னிகாபுரம், வெங்கட்ராயன்வலசு, பந்தயம்பாளையம், வீரப்பம்பாளையம், சுனைபாறை, அழகுகவுண்டன்வலசு, வடபழனி, செல்லாம்பாளையம், கொமாரபாளையம், சுள்ளிக்காடு, நல்லாமங்காபாளையம், வெட்டுக்காட்டுவலசு மற்றும் கண்ணம்மாபுரம்.
ஈங்கூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, தோப்புபாளையம், பெருந்துறை ஆர்.எஸ். மற்றும் பெருந்துறை ஹவுசிங்யுனிட் பகுதி.